அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படமாக மாமனிதன் தான் என்றும் கமல் ஹாசனுடனான தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.
வாழ்த்துகிறேன் தம்பி @Udhaystalin . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) December 14, 2022
சென்னை கிண்டியில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாமனிதன் மற்றும் கமல் காசன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். தற்போது மாமனிதன் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் நடிப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. இந்நிலையில் அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து பேட்டியளித்த அவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படமே தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் கமல் தயாரிக்கும் படத்திலிருந்து தான் விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் இதனால் உதயநிதி ஸ்டாலின் இனிமேல் நடிக்க மாட்டார் என்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் உதயநிதியை வாழ்த்தி ட்வீட் ஒன்று செய்துள்ளார்.
அந்த பதிவில் வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது. என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.