தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த வாரம் கடந்த வாரம் பருவமழை காரணமாக மாண்டஸ் புயல் தாக்கி பல சேதங்களை ஏற்படுத்தியது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி காரணாமாக தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் அளவு குறைந்தது. ஆனால் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வரும் நிலையில் மாண்டஸ் புயலின் காரணமாக பருவமழை அதன் இயல்பான அளவை அடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் புயலின் காரணமாக மேலடுக்கு சுழற்சி ஏற்படுவதால் சில தினங்களுக்கு மழை தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் பெய்யாமல் இருந்தது. இதனால் பருவமழை முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்பில்லை என்றாலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் மணிக்கு 65 கீமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில், மேக மூட்டத்துடனும் சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.