54ம் ஆண்டு அழகுமுத்து மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா..!! 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திகடன்..!
சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகர் ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் கோவில் 54ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. அன்று மாலை மேளதாளங்கள் முழங்க அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்..
அப்போது கொருக்குப்பேட்டை அண்ணாநகர் பகுதி முழுவதும் மக்கள் தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.., அதன் பின் அன்று மாலை அம்மனுக்கு ஊர் தலைவர் மற்றும் ஊர் நிர்வகிஸ்தர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது..
அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.., அதன் பின் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8ம் தேதி அன்று) அப்பகுதி பெண்கள் விளக்கு பூஜை எடுத்து வழிபட்டனர்..
திருவிழாவின் 9ம் நாளான நேற்று அம்மனுக்கு 1000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு (வேல்) குத்தியும், பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும்., காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்..,
அதனை தொடர்ந்து நாளை காலை கூழ் ஊற்றுதலும் இரவு அம்மன் வீதி ஊர்வலமும்., வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி மஞ்சள் தண்ணி ஊற்றுதலுடன் திருவிழா நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..