விசிக பிரமுகரின் கள்ளக்காதல் வைத்து கொண்ட பெண்..! திடீர் தற்கொலை..! அம்பலமான பல உண்மைகள்..!
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கு 5 வயதில் மகள் உள்ள நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்ற நபருடன் கள்ள காதலில் இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இதற்கு முன் காதலித்து வந்துள்ளனர்.., ஆனால் இவர்களின் காதலுக்கு பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், பின் பவித்ராவை அவரின் அத்தை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் பவித்ராவின் தந்தை.
திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலம் தமிழ்வாணன், பவித்ராவிடம் பேசியுள்ளார். ஆரம்பத்தில் பேச தொடங்கிய இவர்கள்.., நாள்பட வெளியே சென்று சுற்றியுள்ளனர், பின் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அதை தமிழ்வாணன் வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
இதை பார்த்து பவித்ராவின் கணவர் சத்தம் போட்டு விட்டு.., நமக்கென்று ஒரு பெண் குழந்தை இருக்கிறது அதை பற்றி யோசி, நடந்ததை விட்டுவிடு என அறிவுரை கூறியுள்ளார், இதையெல்லாம் பொருட் படுத்தாத பாவித்தரா.., தமிழ்வாணனை வரவழைத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை எடுத்துக்கொண்டு 5 வயது குழந்தையையும் அழைத்து சென்றுள்ளார்.
கடந்த வாரம் பவித்ரா சென்றிருந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதுகுறித்து பொத்தேரி காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.., தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
பின் இறந்த பவித்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பெயரில் விசிக பிரமுகர் தமிழ்வாணன் கைது செய்யப்பட்டார்.., ஆனால் இறந்த பவித்ரா இவரால் தான் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணம் எதுவும் கிடைக்காததால் தமிழ்வாணன் விடுதலை செய்யப்பட்டு, விசாரணை என்றால் காவல் நிலையம் வர வேண்டும் என கூறி அனுப்பியுள்ளனர்.
இவர்களின் இந்த கள்ள காதலால் 5 வயது குழந்தை தாயை இழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post