கடவுளிடம் சீட்டிங் செய்த மர்ம நபர்..? கோவில் ஊழியர்களுக்கு பேர் அதிர்ச்சி..!!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாசலம் அப்பாண்ணா வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் உள்ளது. பலரும் போற்றப்படும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் .
15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி, நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.
உண்டியல் காணிக்கை எண்ணும் போது, பக்தர் ஒருவர் அளித்திருந்த கோடக் மஹிந்திரா வங்கியின் காசோலை ஒன்று உண்டியலில் கிடைத்துள்ளது. இதை எடுத்து பிரித்து பார்த்ததில் ரூ.100 கோடி கோயில் பெயரில் காணிக்கையாக எழுதி இருக்க
இது குறித்து கோவில் ஊழியர்கள் அந்தக் கோவிலின் செயல் அலுவலர் திரிநாத ராவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின் அவர் அந்த காசோலையை எடுத்துக் கொண்டு எம்.வி.பி டபுள் ரோட்டில் உள்ள கோடக் மஹிந்திரா வங்கி கிளைக்குச் சென்றுள்ளார்.
வங்கியில் காசோலையை கொடுத்து சோதனை செய்த போது அந்த காசோலைக்கு சொந்தமான வாடிக்கையாளர் போடேப்பள்ளி ராதாகிருஷ்ணா என்பது தெரியவந்தது, மேலும் அவரது கணக்கில் வெறும் பதினேழு ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
வராக லட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த அந்த காசோலையில் முதலில் 10 ரூபாய் என்று எழுதிவிட்டு, பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என எழுதியுள்ளார், வேண்டுமென்றே வாடிக்கையாளர் இப்படி செய்திருப்பதும் அதில் தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post