சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!! துணை போன சித்தப்பா..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
அரியலூர் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய காரணமாக இருந்த சித்தப்பாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டம் ஏழேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் தனது அண்ணன் மகளான 18 வயது சிறுமிக்கு கோப்பிலியன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருடன் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அருள்செல்வன் மனைவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்..
பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.. அதனையடுத்து அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள் செல்வன் மற்றும் பழனிச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது விசாரணை முடிவடைந்த நிலையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த அருள் செல்வனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் பதினைந்தாயிரம் ரூபாய் அபராதமும் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக சிறுமியின் சித்தப்பா பழனிசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..