திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தொடங்கிய கொடியேற்றம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில். தருமபுரம் ஆதித்தனாருக்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. அடுத்த மாதம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீதர்மசம்வர்த்தனி அம்மாள் மற்றும் ஐயாறப்பர் சிறப்பு அலங்காரத்தில் மக்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த சிறப்பு அருளும் காட்சி கொடி மரத்தின் முன்பாக நிகழ்ந்தது. பின் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றத்தை துவக்கினார்.
இன்று கொடியேற்றத்தில் தொடங்கிய திருவிழா அடுத்த மாதம் மே7ம் தேதி வரை நடைபெறும். முக்கிய விழாவாக ஏப்ரல் 29ம் தேதி, தன்னைத்தான பூஜித்தல் பூஜை நடைபெற உள்ளது.தன்னைத்தான பூஜித்தல் என்பது ஆறு ஊர்களில் இருக்கும் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு. ஐயாறப்பர் சன்னதிக்கு முன் வைத்து தினமும் பூஜை செய்வார்கள். பின் மே 3ம் தேதி அனைவரையும் தேரில் வைத்து தேரோட்டம் நடத்துவார்கள்.


















