அறநிலைய துறைக்கு கோரிக்கை வைத்த – சனீஸ்வரர் பக்தர்கள் ?
சின்னமனுர் கிராமத்தில் உள்ள குச்சனுர் சனீஸ்வரர் புகழ் பெற்றவர், இவருக்கென்று தனி கோவிலே உண்டு. இந்த கோவிலில் சனீஸ்வரர் சுயம்புவாக தோன்றி, பின் சனீஸ்வரராக தோன்றினார்.
தமிழ்நாட்டில் சனீஸ்வர பகவானுக்கு என்று தனி கோவில்கள் கிடையாது. எனவே சனீஸ்வரை தரிசனம் செய்ய மக்கள் சின்னமனூர் தான் வர வேண்டியிருக்கும்.
தினமும் 1000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இக்கோவிலுக்கு வருகின்றனர். முக்கியமாக சனிக்கிழமை மட்டும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்வார்கள்.
எனவே லட்சம் கணக்கில் கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் இப்பேர் பட்ட புகழ்பெற்ற கோவிலில் ஒரு தண்ணீர் வசதியோ, கழிப்பீடமோ இல்லை.
கோவிலுக்கு வெளியிலும் கூட, ஒரு கடைகள் கிடையாது. உணவகமோ, தின்பண்ட கடையோ எதுவும் இல்லை.
வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என பலரும் இந்த கோவிலுக்கு வந்து, சனீஸ்வரரை தரிசனம் செய்கின்றார்கள். சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே நீண்ட நேரம் வரிசையில் நின்று தான் கடவுளை தரிசனம் செய்கிறோம்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் மருத்துவ உதவி இவர்களுக்கு தேவைப்பட்டால். அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்.
உணவு இல்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து கழிப்பறைக்கும், மருத்துவமனை வசதி போன்ற உதவிகளை செய்து கொடுத்தால் போதும் என ஹிந்து அறநிலைய துறைக்கு பக்தர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Discussion about this post