மகளை குடிநீர் தொட்டியில் வீசிய தந்தை.. இதனை கண்ட தாய் எடுத்த விபரீத முடுவு..!
கோவை ஒன்றிபுதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மனைவி புஷ்பா என்ற மனைவியும் இவர்களுக்கு ஹர்ஷினி, சிவானி ஆகிய 2 குழந்தைகள் இருந்தன. பெயிண்டராக வேலை செய்து வந்த தங்கராஜ் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது போதையில் வந்து புஷ்பாவிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சகித்துக் கொண்டு வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தங்கராஜ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை அக்கம்பக்கத்தினரிடம் சென்று தண்ணீர் தொட்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடப்பதாக கூறி நடகமாடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தண்ணீர் தொட்டியில் இருந்த மூவரின் சடலைத்துயும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.
விசாரணையில் கணவர் தங்கராஜ் முன்னுக்கு பின் முரனான பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் தங்கராஜை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது, குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் புஷ்பாவிடம் மது அருந்த பணம் கேட்டபோது அவர் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் மூத்த மகள் ஹர்ஷினியை வீட்டின் பின்புறம் உள்ள 10 அடி ஆழ குடிநீர் தொட்டியில் வீசி கொலை செய்துள்ளார்.
மகள் தண்ணீர் தொட்டில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்ட புஷ்பா மற்றும் இரண்டாவது மகள் சிவானி உடன் அதே தன்னைத் தொட்டில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்