மீண்டும் ஒரு பழிக்கு பழி.. ஜாமினில் வெளிவந்த வாலிபர்.. மர்ம கும்பலால் ஓடஓட வெட்டி கொலை..!
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு பகுதியில் வசித்து வந்த ஸ்ரீராம் என்ற 27 வயது வாலிபர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாதா கோட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி சின்னா என்கிற பிரின்ஸ் லாரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்து சிறையில் அடக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஜாமினில் வெளிவந்த வெளிவந்த அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த ஸ்ரீராம் திடீரென இரவு அலறி அடித்து கொண்டு சாலையில் ஓடினார். பின்னால் 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஸ்ரீராமை துரத்தி சென்று சரமாரியாக வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீராம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீசார் ஸ்ரீராமின் உடலை மீட்டுஉடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசர் தப்பி ஓடிய 6 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப தினங்களாகவே தொடர்ந்து இதுமாதிரியான பழிக்கு பழி கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
-பவானி கார்த்திக்