டெல்லியில் பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு..!!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
மத்திய பாஜக அரசானது தமிழ்நாட்டிற்கு மட்டும் நிதியை கொடுக்காமல் இருக்கிறது., அதாவது “நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது” என்ற நோக்கத்துடன் வஞ்சிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது., பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் பாஜக மேற்கொள்ளவில்லை என தமிழக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது..
சென்னையில் மெட்ரோ இரயில் திட்டமானது 2ம் கட்ட திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது., அந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யும் படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு பலமுறை கோரிக்கை வைத்தது.. இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது.. அதேபோல், புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்காக அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு சார்பில் முன்னரே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தது..
இந்த இரண்டு திட்டங்கள் மட்டுமின்றி சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்காக மத்திய அரசு பங்கு அளிப்பதாக தெரிவித்திருந்தது.., ஆனால் அதற்கான பங்கு நிதியை கூட பாஜக அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி தற்போது வரை கிடைக்காமல் இருப்பதால்., அமெரிக்கா சுற்று பயணங்கள் முடித்து சென்னை திரும்பியதும் இந்த பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டு., தீர்வு காணப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் முன்னரே அறிவித்திருந்தார்..
அதன்படி இன்று டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து., தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நிறுத்திவைக்கபட்டுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அழிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார். மற்றும் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் கொடுத்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..