பெற்ற மகளை கர்பமாக்கிய தந்தை..!! போலிஸ் விசாரணையில் உயிரிழப்பு..!! நடந்தது என்ன..?
பேரணாம்பட்டில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்து போனார்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அனீஸ் அகமது (வயது42) தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் (வயது13) அதே பகுதியில் உள்ள இஸ்லாமிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகளுக்கு உடல்நல குறைவு காரணமாக மனைவி நசீமா உடன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர் அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனிடையே இதுகுறித்து குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு வந்த புகாரை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் தனது தந்தை மகளை பாலியல் பலாத்காரம் செய்து நான்கு மாதம் கர்ப்பமாக்கியது தெரியவந்தது..
இதனிடையே சிறுமியின் தந்தை அனீஸ்அகமது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார் இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அனீஸ் அகமது எட்டே நாளில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..