சார் பதிவாளர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்..!!
குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத 43ஆயிரம் பணம் பறிமுதல்…
ஊழல் இல்லா மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. அதே சமயம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இந்தியன் பட பாணியில் நகர்புற அமைப்பு அலுவலகத்தின் கழிப்பறையில் தனிநபர் ஒருவர் “லஞ்சம் வாங்குவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தண்டிக்கபடுவீர்கள் என எழுதி வைக்கப்படிருந்தது.. அது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்க நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்து அழகேசன் என்பவர் சார் பதிவாளராக கடந்த 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட நிலம், வீட்டுமனை பட்டாவை மற்றும் வீடுகளை பத்திர பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே முறைகேடாக இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு நடைபெற்று வருவதாகவும், இடைத்தரகர்களை வைத்து கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் இன்று 11பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின் இரவு 8:30 மணி நிலவரப்படி கணக்கில் வராத 43 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து மேலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..