5 மாத குழந்தைக்கு எமனாக மாறிய தந்தை.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஓல்டு ஊட்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பிரேம்-ரம்யா. இவர்களுக்கு 5 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தது.
கொரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் பிரேம் வழக்கம்போல் நேற்று காலை 7 மணியளவில் வேலைக்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.
அதன்பின் நீண்ட நேரம் ஆகியும் குழந்தை எழாமல் இருந்த நிலையில், சந்தேகமடைந்த தாய் ரம்யா, குழந்தையை எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். ஆனால் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுத்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் கண்ணங்கள் வழக்கத்திற்கு மாறாக சிவந்து காணப்பட்டதைக் கண்ட மருத்துவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் தந்தை பிரேம் குழந்தையின் கண்ணங்களை தாக்கியதால் குழந்தை இறந்ததாக தெரியவந்தது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை பிரேமால் தாங்க முடியாததால் குழந்தையை அடித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுதுள்ளது. அந்த நேரம் குழந்தை அழுதத்தால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையின் கண்ணங்களை தாக்கியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேம் தாக்கியதில் குழந்தையின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சேதம் ஏற்பட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெற்ற குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரேம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்