கடலூர் அதிமுக பிரமுகர் கொலையில் சிக்கிய கும்பல்..! கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
ஆடுகளை திருடி கொடுத்தால் பணம் கொடுக்கிறோம் என சொல்லி ஏமாற்றியததால் அதிமுக முன்னாள் கவுன்சிலரை கொலை செய்ததாக கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கடலூர் அருகே வண்டிப்பாளையம் ஆலை காலனியை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் “புஷ்பநாதன்”.. இவருக்கு மஞ்சுளா என்ற ஒரு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் கடந்த சனிக்கிழமை இரவு புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் சென்று கொண்டிருந்த பைக்கில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்..
அதில் புஷ்பநாதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.
காவலர்கள் நடத்திய சோதனையில் அந்த மர்ம நபர்கள் அஜய்(21), நேதாஜி(23) மற்றும் சந்தோஷ்(24) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. அதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் அவரது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல தகவல்கள் வெளி வந்தது.
கைதிகள் கொடுத்த வாக்கு மூலம்., நாங்களும் முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதனும் ஒரே ஊர். அவர் ஆடு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதனால், ஆடுகள் திருடி வந்து கொடுத்தால் பணம் தருவதாக எங்களிடம் கூறினார்.
அதை நம்பி நாங்களும் பலமுறை அவருக்கு ஆடுகள் திருடி வந்து கொடுத்தோம். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்காமல் மிக மிக குறைவான பணத்தையே கொடுத்தார். சில சமயங்களில் பணமும் கொடுக்காமல் இருந்தார். மேலும் ஆடுகள் திருடும்போது நாங்கள் போலீசில் சிக்கிக் கொண்டோம். ஆனால் எங்களை அவர் ஜாமீனில் எடுக்கவில்லை.
மேலும் ஆடுகள் திருட எடுத்துச் சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதையும் அவர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் செலவுக்கு பணம் கேட்டபோது அதையும் கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் ஊர்க்காரர்களிடம் எங்களை ஆடு திருடர்கள் என்று கூறி வந்தார்.
இதனால் நாங்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தோம். மேலும் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, நாங்கள் திட்டமிட்ட படி சனிக்கிழமை இரவு அவர் மோட்டார் சைக்கிளில் வரும் போது அவரை வழிமறித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கைதான மூன்று பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், புஷ்பநாதனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
– லோகேஸ்வரி.வெ