பட்டாகத்தியால் சம்பவம் செய்த பிரபல ரவுடி..!! போலீசில் சிக்கியது எப்படி..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த காட்டுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்த வட்டி தொழில் செய்து வரும் குட்டி தாதாவாக வளர்ந்து வரும் லோகேஷ் (எ) பரத் என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் தனதுபிறந்த நாளை பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
பின்னர் பரத்தின் ஆதரவாளர்கள் ஆளுயரமலர் மாலை அணிவித்து சால்வை பணம் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, தொடர்ந்து பரத்தின் ஆதரவாளர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நிகழ்ச்சிகளை கட்டியுள்ளது.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அருகாமைலேயே கண்ணமங்கலம் காவல்நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், காட்சியை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பவத்திற்கு பிறகு அனைத்து பகுதிகளிலும் போக்கிரிகளை ஓழிக்க வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி எடுத்த வரும் நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..