செந்தில்பாலாஜி வழக்கில் ட்விஸ்ட் வைத்த அமலாக்க துறை..!! நொந்துபோன செந்தில் பாலாஜி..!!
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார். இவ்வழக்கில் இருந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த இரு மனுக்களை சமீபத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த சூழல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 16ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.