பொள்ளாச்சி கிணத்துக்கடவை அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக வருகை தந்த கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை மாணவ மாணவிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்தி குமார்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையலறைக்கு ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட தயாராக இருந்த மதிய உணவையும் சாம்பாரை பார்வையிட்டு அதனை ஒரு தட்டில் வாங்கி சுவைத்து பார்த்தார்.
மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்று கேட்டு
சாம்பாரில் சத்தான காய்கறிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்
பின்னர் பள்ளி வகுப்பறைக்கு சென்று மாணவ மாணவிகளிடம் கற்றல் திறனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அதன் பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் எதிர்கால கனவுகள் குறித்தும் எதிர்காலத்தில் நீங்க நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்றும் கேட்டறிந்தார் அதற்கு மாணவர்கள் போலீஸ், இன்ஜினியர் எனக் கூறினார் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி பள்ளியின் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்