இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பேசுகையில்,
“எல்லா புகழும் இறைவனுக்கே.. இந்த படத்தின் கதை எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். இசையில் அதை என்னால் பண்ண முடியவில்லை. எனவே, அதை படமாக பண்ண முடிந்தவருடன் சேர்ந்து இசை அமைத்தேன். மாரி செல்வராஜ் கதை சொல்லும் போது இவ்வளவு நன்றாக வரும் என எனக்கு தெரியாது. அதற்கு முக்கிய காரணம் வடிவேலு சார். வடிவேலு சார் உதயநிதிக்கு பின்னால் பைக்கில் செல்லும் அந்த காட்சியை பார்த்தேன். மிகவும் சோகமாக கிட்டதட்ட அழுகின்ற நிலையில் அவர் செல்வார். அந்த காட்சி எனை மிகவும் பாதித்தது. அதனால் முழுமையாக இந்த கதையை எடுத்து செய்தேன்” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.