கோவில் திருவிழாவில் நடந்த தகராறு.. பறிபோன இரண்டு உயிர்கள்..
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ்வரன், மதியழகன், மதிராஜா. சகோதரர்களான இவர்கள் 3 பேரும், அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு நேற்று சென்றனர்.
அப்போது, இவர்கள் 3 பேருக்கும், முருகேஷ்வரி என்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், முருகேஷ்வரியின் மகன்கள், மதியழகன் மற்றும் மதிராஜாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இவர்களது தாக்குதலை தடுக்க சென்ற மகேஷ்வரனையும், முருகேஷ்வரியின் மகன்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தாப்பி ஓடியுள்ளனர்.
இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திவீர சிகிச்சை பெற்று வருகிறார். தகவறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில் முக்கிய கொலையாளிகளான விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறால், இரண்டு உயிர்கள் பலியாகியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்