கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு… மாநில சுற்றுலாதுறை அமைச்சர் கூறியது என்ன?..!
தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுற்றுலா தலங்களை பார்க்க 14 லட்சம் பேர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பாரதி நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அறைகள், கழிவறை உள்ளிட்டவற்றை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள ஹோட்டல்கள் முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது தற்பொழுது ஹோட்டல்கள் மேம்படுத்தப்பட்டு லாபத்தில் இயங்கி வருவதாக தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் கடந்த ஆண்டு காட்டிலும் 2023 – 24 ஆண்டில் சுற்றுலா இடங்களை காண 14 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் 100 கோடி அளவில் சுற்றுலாத்துறை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாத்துறைக்கு ஏற்றவாறு எந்த இடம் உள்ளதோ அவ்விடத்தை தேர்வு செய்து சுற்றுலா தளமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்