பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த இயக்குனர்..! கையும் களவுமாக சிக்கியது எப்படி..?
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய உதவி இயக்குனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் சித்தார்த்வர்மா (வயது 30) இவர் சினிமாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார்.., இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூர் ராகவேந்திரா காலனியில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.. அறிமுகமான நொடியிலேயே அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.. அதாவது அந்த பெண்ணிடம் சினிமா ஆசையை தூண்டியுள்ளார்.. அவரின் சூல்ட்சம் அறியாத அந்த பெண்ணும் சார் என்னை எப்படியாவது சினிமாவில் சேர்த்து விடுங்க எனக்கும் நடிக்கையாக வேண்டும் என்று ஆசையா இருக்கு என கூறி தனது செல்போன் என்னை கொடுத்துள்ளார்.
ஒருநாள் அந்த பெண்ணுக்கு போன் செய்த சித்தார்த்வர்மா.., நான் இயக்குனரிடம் பேசிவிட்டேன் உடனே உங்களுடைய போட்டோவை கேட்கிறார்கள்.. என்னுடைய வீட்டிற்கு வந்தால் போட்டோ சூட் செய்யலாம் எனக்கூறி அழைத்துள்ளார்..
அங்கு போட்டோசூட் எடுப்பதற்காக வந்த அந்த பெண்ணிடம்.., போட்டோவிற்கு எப்படி நிற்க வேண்டும்.., பார்க்க வேண்டும் என சொல்லிக்கொடுப்பதை போல அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை உணர்ந்த அந்த பெண் அதனை மறுத்துள்ளார்.. அப்போதும் விடாத அந்த இயக்குனர்.. எனக்கு பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் தெரியும்..
நீ இதற்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் நான் உன்னை ஹீரோயின் ஆக்கி விடுவேன்.., இதை பற்றி யாரிடமும் சொல்லமாட்டேன் எனக்கூறியுள்ளார். இப்படியே நாட்கள் போக.., ஹீரோயின் வாய்ப்பு கேட்டு அந்த பெண் கேட்கும் போதெல்லாம்.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து வந்துள்ளார். இதனால் ஏமாற்றத்தை உணர்ந்த அந்த பெண்.. கச்சிபவுலி காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளித்துள்ளார்..
அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சித்தார்த் வர்மா கைது செய்யப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.