எல்லாருக்கும் பிடித்த முட்டை கலக்கி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கறி முட்டை கலக்கி செய்ய
முட்டை – 1
மிளகாய் தூள் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு – தேவைக்கு ஏற்ப
கோழி குழம்பு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
முட்டை கலக்கி செய்ய
முட்டை – 2
மிளகாய் தூள் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
மிளகு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
கறி முட்டை கலக்கி செய்ய
ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி,அதில் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள்,சிக்கன் குழம்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும்.
பின் கரண்டியால் முட்டையின் ஓரங்களை உட்புறமாக மூடி விடவும். கலவை திரண்டு வந்ததும் உடனே அதனை எடுத்து தட்டிற்கு மாற்றவும். அவ்வளவுதான் கறி முட்டை கலக்கி தயார்.
முட்டை கலக்கி செய்ய
ஒரு கிண்ணத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில் உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும்.
பின் அதன் ஓரங்களை உட்புறமாக மூடவும்.
இந்த கலவை திரண்டு வந்ததும் உடனே ஃபேனில் இருந்து எடுத்து தட்டிற்கு மாற்றவும். அவ்வளவுதான் முட்டை கலக்கி தயார்.
