ஆளுநர் மாளிகை முன் நடந்த வெடிகுண்டு வீச்சை படம் போட்டு காட்டிய டிஜிபி..!!
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு எப்படி வீசப்பட்டது.., ரவுடி கருக்கா வினோத் எப்படி கைது செய்யப்பட்டார் என டிஜிபி சங்கர் ஜிவால் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.., தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என செய்தியாளர்கள் முன் டிஜிபி கூறியுள்ளார்..
நேற்று மதியம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.., கைது செய்த கருக்கா வினோத்திடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சுக்களை போலீசார் கைது செய்துள்ளனர்..
இந்த சம்பவத்திற்கு பிறகு ஆளுநர் மாளிகை முன் கூடுதல் போலிஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.., ரவுடி கருக்கா வினோத்தின் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்..
இதுகுறித்து சில எதிர்கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லையென குற்றம் சாட்டி வருகின்றனர்..,
இதற்கு முற்று புள்ளி வைப்பதற்காக டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்..
மஞ்சள் சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வந்த ரவுடி கருக்கா வினோத் கிண்டி ஆளுநர் மாளிகை வரை.., நடந்தே வந்து ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச முயன்ற போது அங்கு பாதுக்கப்பு பணியில் இருந்த காவலர்கள் விரட்டியுள்ளனர்..
பின் ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள சாலையில் அந்த பெட்ரோல் குண்டை வைத்து எரித்தால்.., காவல்துறை வினோத்தை கைது செய்தது.. இதன் பின்னணியில் யார் இருந்து பெட்ரோல் குண்டை வீச வைத்தார்கள் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..