ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீச்சு..!! ஆளுநர் பரப்பும் வதந்தி..? கண்டனம் தெரிவித்த திமுக..!!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரு சக்கரத்தில் வந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளனர்.., மேலும் வினோத்திடம் இருந்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பாதுகாப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இந்த பெட்ரோல் குண்டு வீச்சால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை அதுமட்டுமின்றி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை.., சர்தால் பட்டேல் சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது..
பெட்ரோல் குண்டு வீசிய அந்த ரவுடியை கைது செய்து விசாரணை செய்தோம் அப்போது மதுபோதையில் நான் இதை செய்ததாக ஒப்புகொண்டார்.. மேலும் தொடர் விசாரணை நடந்து வருகிறது..
இது பற்றி எக்ஸ் இணையதளம் பக்கத்தில் திமுக மாணவர் அணித்தலைவர் ராஜீவ்காந்தி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.., பொய் பேசுவதும் வதந்திகளை பரப்புவது மட்டுமே ஆளுநரின் வழக்கமான வேலைகளில் ஒன்று என கண்டனம் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..