ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!! உடனடியாக அமலுக்கு வரும் திட்டம்..!!
100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்ககோரி தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கிராமப்புற மக்களின் ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாள் வேலையை உறுதி செய்யும் வகையில் ஊரக வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஆனால், இதற்கான நிதியை ஒன்றிய அரசு சமீப காலமாக குறைத்துள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த நிதியை விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.
இதனால் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு மாநில அரசுகள், உடனடியாக சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய வேலை உறுதித்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலமாக திகழ்வதாக குற்ப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்ட தொகையில் 418 புள்ளி 23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஆயிரத்து 337 கோடி இன்னும் தொழிலாளர் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post