தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வளம் வரும் யோசி பாபு தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தாதா என்ற படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு அதற்கு எதிராக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
யோகி பாபு தற்போது சில படங்களில் கதாநாயகனாகவும் காமெடியனாகவும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் தாதா என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் அதனால் தாதா படகுழுவினர் யோகிபாபுவை முன்னிலைபடுத்தி முதல் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. இதற்கு யோகி பாபு எதிரான ட்வீட் ஒன்றை போட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
Iam not hero intha padathla Nithin Sathya hero aver frinda Nan paniiriukan Nan hero illa makkla nambathinga pic.twitter.com/763PslR9Mu
— Yogi Babu (@iYogiBabu) November 28, 2022
அவர் போட்டுள்ள டீவீட்டில், இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை நிதின் சத்யா என்பவர்தான் கதாநாயகனாக நடித்துள்ளார் அவருக்கு நண்பராகத்தான் நன் நடித்துள்ளேன் நம்பாதீங்க மக்களே என்று கூறியிருப்பது சரஹயகியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அந்த படத்தின் இயக்குனர் யோகி பாபு தாதா படத்தினை எந்த தயாரிப்பாளரும் வாங்க விடாமல் செய்து இருக்கிறார் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். யோகி பாபுவின் இந்த செயல் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.