கண் இமைக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய தம்பதிகள்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 பவுன் நகையை திருடிய இளம் தம்பதிகளை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த மாதம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மக்களை பாதுகாப்பதற்காக 1600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் கூட்டம் அதிகமாகவும் நெரிசலாகவும் இருக்கும் இடங்களில் சுமார் ஐந்து பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த மொத்தம் 18 சவரன் தங்க நகைகளை மர்மமான நபர்கள் திருடி சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் தனிப் படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..
அப்போது விசாரணை செய்ததில் சிசிடிவி பதிவுகளை சேகரித்து மர்மமான குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தாம்பரம் மணிமங்கலத்தை சேர்ந்த அஜித் மனைவி பாண்டீஸ்வரி என்ற அனு (வயது 26 ) மற்றும் அவரது கணவர் அஜித் (வயது 29 )ஆகிய இருவரும் நகைகளை திருடியது தெரிய வந்தது.
அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் ஐந்து பெண்களிடம் இருந்த நகைகளை கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களிடமிருந்து 18 பவுன் சவரன் தங்க நகை பறிமுதல் செய்த காவல்துறை மேலும் வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்..
அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கும்பாபிஷேகத்தில் ஆறு பெண்களிடம் நகைகளை பறித்ததாகவும் அதில் அவர்கள் கேரளா மாநிலம் பதிவு எண் கொண்ட சொகுசு காரை வாங்கியதாகவும் தெரிவித்த நிலையில் இவர்களிடம் இருந்த 18 சவரன் தங்க நகை மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த இளம் தம்பதிகள் மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் தர்மபுரி, சென்னை, தாழம்பூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..