டெல்லியில் பள்ளிக்குச் சென்ற 4 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது.
டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பெண் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தையை சேர்த்துள்ளார். கடந்த மே 9ம் தேதி அன்று சிறுமி சக மாணவிகளுடன் பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு ப்யூனாக வேலை பார்த்துக்கொண்டிருந்த 43வயது நபரான சுனில் குமார் என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். சிறுமி பயத்தில் அழ ஆரம்பித்த நிலையில், இதுபற்றி வெளியே சொன்னால் கொண்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இருப்பினும் மாலை வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நடந்த அவலத்தைப் பற்றி அழுது கொண்டே தாயிடம் தெரிவித்துள்ளார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு பெரிய மீசை இருந்ததாக சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இந்த அங்க அடையாளங்களைக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் ப்யூன் சுனில் குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post