சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் வேலூர் மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு:
வேலூர் காட்பாடியில் உள்ள சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் ரேவா சுதர்சன் ராஜ் என்கின்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
வேலூர் காந்திநகரில் வசித்து வரும் மருத்துவ தம்பதியினர் பிரியம்வதா, சுதர்சன் ராஜ் ஆகியோரின் மகள் ரேவா. இவர் வேலூர் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ( சிருஷ்டி சிபிஎஸ்இ பள்ளி) சிபிஎஸ்சி பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பில் படித்து வந்தார்.
இன்று வெளியான சிபிஎஸ்சி தேர்வு முடிவுவில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களில் தலா 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வேலூர் மாணவி சாதனை:
ரேவாவை பள்ளி தாளாளர், பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி பாராட்டினர். மாநிலத்தில் அதிகம் முதல் இடம் பிடித்த ரேவாவை சக பள்ளி மாணவிகள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். ரேவாவிற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் கை கொடுத்து தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் மாணவி ரேவா கூறியதாவது: “தான் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. எல்கேஜி முதல் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை இதே பள்ளியில் தான் பயின்றேன். பத்தாம் வகுப்பிலும் 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் 497 மதிப்பெண்கள் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது பெற்றோரைப் போலவே தானும் மருத்துவராக வேண்டும் என்பதே கனவு இதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளேன்”
நான் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பள்ளியில் எனக்கு பயிற்சி ஆசிரியர்களும் பெற்றோர் அளித்த ஊக்கம் காரணம் என தெரிவித்தார்.
இதற்காக தனியாக டியூஷன் ஏதும் படிக்காமல் ஆசிரியர்கள் பாடாமல் நடத்தும்போது நன்கு கவனித்து படித்தாலே முதல் மதிப்பெண்கள் பெறலாம் என்று கூறினார்.
Discussion about this post