குஜராத் மாநிலத்தில் நவ்சாரி மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதில் பயணித்த பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்தில் நடந்த பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேருந்தில் சிலர் திரும்பினார். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் இருந்த 28 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் தீவிரக் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து முதற்கட்ட விசாரணையில், பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக அந்த பேருந்து காரின் மீது மோதியது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் காயமடைந்த 15 பேருக்கு தலா ₨50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
Discussion about this post