ADVERTISEMENT
“”பச்சூர் டோல்கேட் அருகே விபத்து””
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலட்சுமி மற்றும் அவருடைய மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் காட்பாடி பகுதியில் இருந்து பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சந்தோஷ் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார் .
அப்போது பச்சூர் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியத்தின் மீது மோதி முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதி கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் நிரஞ்சலட்சுமி பலத்த காயம் அடைந்தார்
பின்னர் இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிரஞ்சலட்சுமியை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்த சந்தோஷ் லேசான காய மட்டுமே ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.