“எங்க அண்ணன் வருவாருடா.., அதுக்குள்ள வண்டியை குடுத்துடுடா”.. உங்க அண்ணன் யாருப்பா..?
விருத்தாச்சலம் கடைவீதியில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்ற இளைஞர்களை போக்குவரத்து போலீசார் வழிமறித்து பைக்களை பறிமுதல் செய்துள்ளனர்.., அப்போது அந்த போதை ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கடைவீதி பகுதியில் குடிபோதையில் பைக் ஓட்டி சென்ற இருவரை பாலக்கரையில் வைத்து மடக்கிப்பிடித்த போக்குவரத்து போலீசார் அவர்களிடம் இருந்து வண்டியை பறிமுதல் செய்தது..
பின் அந்த இரு போதை ஆசாமிகளுக்கு நடந்தவாறே அருகில் இருந்த சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் சென்று எங்க பைக் திருப்பி கொடுங்க என கேட்டுள்ளனர்.., அதற்கு காவலர்கள்.., உங்க பைக் எடுத்து சென்றது போக்குவரத்து துறை.., நாங்க சட்டம் ஒழுங்கு என சொல்லியுள்ளனர்..
அதற்கு அந்த போதை ஆசாமிகள் என்ன பெரிய சட்ட ஒழுங்கு ஒருத்தர் கேட்டா முறையா பதில் சொல்ல மாட்டிங்களா..? இருடா உங்களுக்கு எல்லாம் எங்க அண்ணன் தான் கரெக்ட்.., எங்க அண்ணன் “சீமான்” வருவாரு இருங்கடா அப்புறம் இருக்கு உங்களுக்கு எல்லாம்..
ஒழுங்கா சீமான் தம்பிங்களோட வண்டியை திருப்பி கொடுங்க இல்லை வேற மாதிரி ஆயிடும் என நடு ரோட்டில் போலீசிடம் மதுபோதை ஆசாமிகள் செய்த வாக்குவாதத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..,
மேலும் நடு ரோட்டில் சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசியதால்.., காவல் துறை அதிகாரிகள் வண்டியில் ஏற சொல்லியதற்கு அதெல்லாம் முடியாது நாங்க யார் தெரியுமா என மீண்டும் பழைய சங்கதியை பாடியுள்ளனர்.., இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..