தம்பியை கொலை செய்த அண்ணன்..!! பரபரப்பான வேலூர்..!!
குடியாத்தத்தில் சொத்து பிரச்சனையில் கத்தியால் குத்தி தம்பியை கொலை செய்த அண்ணன் உடலை கைப்பற்றி குடியாத்தம் போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கவியரசன் மற்றும் பாரதி இருவரும் காதலித்து திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். இந்நிலையில் கவியரசன் உடன் பிறந்த அண்ணன் கார்த்திகேயன் மற்றும் அக்கா கம்சலா ஆகிய மூன்று பேருக்கும் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது..
கவியரசனின் வீட்டில் ஆள் இல்லாத போது அண்ணன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்து கவியரசன் மனைவியுடன் பிரச்சனை செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கவியரசனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். கவியரசன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.. அப்போது கார்த்திகேயன் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ததை தெரிவித்துள்ளார்.
உடனடியாக கவியரசன் அண்ணன் கார்த்திகேயனிடம், நான் இதைபற்றி கேட்டு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டுள்ளார். அதிக நேரம் ஆகியும் கவியரசன் வீட்டிற்கு வராததால் அவரைத் தேடி அவருடைய மனைவி பாரதி சென்றுள்ளார். அப்பொழுது கவியரசனம் அவருடைய அண்ணன் கார்த்திகேயனும் இருவரும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை கண்டு மனைவி பாரதி கவியரசனை சமரசம் பேசி வீட்டிற்கு அழைத்து வரும்போது அந்த அண்ணன் கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவியரசனை முதுகில் நான்கு இடத்தில் குத்தியுள்ளார்..
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கவியரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்த மருத்துவர்கள் கவியரசி ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் கவியரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதன் பின் அவரது மனைவி பாரதியிடம் புகாரை பெற்றுகொண்டனர்..
மேலும் கவியரசனை கொலை செய்த அண்ணன் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனைக்காக அண்ணனே., தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..