மர்ம நபர் ஏற்படுத்திய விபத்து..!! கூலி தொழிலாளி மரணத்தை மறைத்த போலீஸ்..!! பரபரப்பான போளூர்..!!
கூலி தொழிலாளி இறந்ததை மூடி மறைத்த காவல் துறையை கண்டித்து அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் தேவராஜ். கூலி தொழிலாளியான இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதூர் மாரியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள போளூர் சாலையில் இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்..,
தகவலின் பேரில் அங்கு வந்த புதுப்பாளையம் காவல் துறையினர் தேவராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். வெளியூருக்கு வேலைக்கு சென்று இருப்பதாக நினைத்திருந்த குடும்பத்தினருக்கு கடந்த 20 நாட்களாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்காத நிலையில் தேவராஜ் உயிரிழந்ததாக காவல் துறையினர் கூறியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தேவராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை வாங்க போவதில்லை எனவும், இறந்தவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என திருவண்ணாமலை – புதுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த உடன் விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் திருவண்ணாமலை போளூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..