காதலிப்பதாக கூறி பள்ளி மாணவியை ஏமாற்றிய காதலன்..!! போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..!!
அரியலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்…
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் கோபு (வயது 29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது..
இந்நிலையில் இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம் திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்துள்ளார்., இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது., பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதாக சொல்லபடுகிறது..
பின் ஒருநாள் அரவிந்தன்., அந்த மாணவியிடம் எங்க அம்மா உன்னை பார்க்க ஆசைபடுறாங்க., நம்ப காதல் விஷயத்தை வீட்டில் சொல்லிட்டேன்., என கூறி அந்த மாணவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.. இதனையடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.,
இதேபோல் அடிக்கடி அந்த மாணவியை சந்தித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்., இதனையடுத்து மாணவியின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்த மாணவியின் பெற்றோர் இதை பற்றி அந்த மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்ததை கூறியுள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் அரவிந்தன் கோபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். அரவிந்தன் செல்போனில் பல ஆபாச வீடியோக்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..