ஆந்திரா ஸ்டைல் பச்சைபயிறு வடை..!
பச்சைப்பயிறில் புரோட்டீன், ஃபைபர் என பலவகை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. நாம் பச்சை பயிறை வைத்து சுவையான உணவுகள், சாலட்டுகள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் என பல்வேறு உணவு வகைகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு 200 கிராம்
பச்சை மிளகாய் 10
இஞ்சி 2 அங்குலம்
உப்பு தேவையானது
நல்லெண்ணெய் 300 மிலி
செய்முறை:
முதலில் பச்சை பயிறை சுத்தம் செய்து நீரில் கழுவி பின் அதில் நீரை மூழ்க்கும்படி ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
3 மணி நேரம் கழித்து பச்சை பயிறை வடிகட்டி ஒரு மிக்ஸியில் போட்டு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டிய பச்சை பயிறு கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒரு கவரில் எண்ணெய் தடவி அதன் மேலே வைத்து தட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு அது சூடானதும் அதில் தயாரித்த வடைகளை போட்டு நல்லா பொன்னிறமாக இருபுறமும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பச்சைபயிறு வடை தயார். இவற்றுடன் தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
பள்ளி சென்று வீட்டிற்கு ஈவினிங்கில் வரும் குழந்தைகளுக்கு இதை சூடாக செய்து கொடுங்க அப்பறம் பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள்.