கேரளாவில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக பேட்டரியை முழுங்கியுள்ளான் பிறகு அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களின் துணிகர செயலால் சிறுவன் காப்பாற்றபட்டுள்ளது மக்களிடையே பெரிதும் பாராட்டபட்டு வருகிறது.
குழைந்தைகள் சிறிய சிறிய பொருட்களை வாயில் வைத்து விளையாடும் பொழுது தவறுதலாக அதனை முழுங்கி விடுவார்கள் அதனை பெற்றோர்கள் கவனிக்க தவறினால் அது குழந்தையின் உயிருக்கே பெரும் ஆபத்தாகவும் அமையும். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள 2 வயது சிறுவன் ரிஷிகேஷ் என்பவர் பேட்டரி வைத்து விளையாடி வந்துள்ளான். பெற்றோர்களின் கவனக்குறைவால் அந்த சிறுவன் அந்த பேட்டரியை அப்படியே முழுங்கியுள்ளான். உடனே சுதாரித்துக்கொண்ட பெற்றோர்கள் அந்த சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையிலிருந்து அந்த சிறுவனை மற்றொரு மருத்துமனைக்கு மாற்றியுள்ளனர்.
அங்கு சென்றவுடன் குழந்தையின் நிலையில் புரிந்து கொண்டு மயக்க மருந்து கொடுத்து 20 நிமிடங்கள் போராடி அறுவை சிகிச்சை மூலம் அந்த பேட்டரியை அகற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பேசுகையில், ரிஷிகேஷ் அந்த பேட்டரியை முழுங்கியவுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தங்களுக்கு தகவல் வந்த உடன் அறுவை சிகிச்சைக்கு தேவையானதை தயார் செய்தோம். பின்னர் அந்த குழந்தைக்கு மயக்கமருந்து செலுத்தி 20 நிமிடங்களாக எண்டோஸ்கொப்பி சிகிச்சை மூலம் அந்த பேட்டரியை அகற்றியுள்ளோம் என்று அவர் கூறினார். தற்போது அந்த குழந்தை ஆரோக்யமாக இருக்கிறது என்று அவர் கூறினார். அந்த குழந்தை முழுங்கிய பேட்டரி 5 செ.மீ. நீளமும் 1.5 செ.மீ. அகலமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post