உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி அவ்வப்போது பயனாளர்களுக்கு ஏற்றவாறு புது புது மாற்றங்களை கொண்டு வரும் இந்த முறை மிக முக்கியமான மாற்றமாக அனைவருக்கும் தேவையான ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது.
பொதுவாக வாட்ஸ் ஆப்-ல் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு குரூப்பிற்கு தவறான தகவலை அனுப்பியபின் அதை நீக்க delete for everyone என்ற வசதி இருக்கும். இதன் மூலம் தகவலை அனுப்பப்பட்டவர் அதனை பார்க்க முடியாதபடி நீக்க முடியும். இருப்பினும் சில முறை பல பயனாளர்கள் தவறுதலாக delete for me என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விடுவார்கள். இதனால் தகவலை அனுப்பியவர் எதையும் செய்ய முடியாத நிலையில் அவதிப்படுவர். இந்த நிலையை புரிந்து கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
அந்த அப்டேட்டின் படி delete for me கொடுத்து நீக்கபட்ட தகவலை மீண்டும் பெரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் delete for me கொடுத்து நீக்கப்பட்ட தகவலை அடுத்த 5 வினாடிகளில் மீட்கும் படி undo ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் delete for everyone கொடுக்க வேண்டிய தகவல் delete for me மூலம் நீக்கப்பட்டால் undo வசதி மூலம் திரும்ப பெற்று அதனை delete for everyone கொடுத்துக்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.