தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது உடல்நல குறைவால் கடும் அவதிபட்டு வருகிறார். இதனால் அவர் சிகிசைக்காக நீண்ட இடைவெளி எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ்,தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான சமந்தா நடித்து வெளியான யசோதா திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ள சமந்தா சமீபத்தில் தான் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். இதனால் அவருக்கு உயர்சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சிகிச்சைக்காக அவர் தென்கொரிய செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி அளிப்பதாக தெரிகிறது. பேமிலி மேன் 2 படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு இந்தியா அளவில் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தாலும் அவரது உடல்நிலையை கருதி அவர் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து தரப்பு சினிமா ரசிகர்களும் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.