பயிற்சியாளர் அலட்சிதால் சிறுவன் உயிரிழப்பு..! தாய் கண் முன் நடந்த சோகம்..!
சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்னகுமார், ராணி, தம்பதியினர் இவர்களுக்கு 10 வயதில் சபரீஸ்கார் என்ற மகன் உள்ளான்.., வாய் பேச முடியாத அந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
மருத்துவர் ஆலோசனை படி சிறுவனுக்கு அவர்களது பெற்றோர். சென்னை பெரியார் நகரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். அப்படியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை சிறுவனை பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்படி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது சிறுவனின் தந்தைக்கு ஆபிஸ் வேலை இருந்ததால், அவரது காரில் இருந்து வேலை பார்த்துள்ளார். சிறுவனின் தாய் ராணி சிறுவனை பயிற்சி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சபரீஸ்கார் தண்ணீரில் தத்தளித்துள்ளான்.. அதை பார்த்த சிறுவனின் தாய் உடனே பயிச்சியாளரை அழைத்து மகனை காப்பற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த பயிற்சியாளர் மிகுந்த அலட்சியம் காட்டியுள்ளார்.,
அதாவது சிறுவனின் தாய் அழைத்த போது., இங்க எல்லாம் இப்படி தாங்க இருக்கும். அப்போதான் பசங்க நீச்சல் கத்துப்பான். அவன் தண்ணீல தத்தளிக்கல நீச்சல் கத்துட்டு இருக்கான் நீங்க போங்க என்று நீச்சல் பயிற்சியாளர் கூறியுள்ளார்..
பின் தாய் ராணி.., தனது கணவரிடம் இதை பற்றி கூறியுள்ளார்.. பின் ரத்னகுமார் தண்ணீரில் குதித்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.. அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்..
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து.., சிறுவனை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்..
தங்களுடன் குழந்தையின் மரணத்திற்கு நீச்சல் பயிற்சியாளர் தான் காரணம் என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.. அந்த புகாரின் பேரில் நேற்று நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..