நள்ளிரவில் வந்த முக்கிய அறிவிப்பு..! வங்கதேச நாடாளுமன்றத்தில் நடந்தது..?
வங்கதேசத்தில் நேற்று இட ஒதுக்கீட்டிற்காக ஏற்பட்ட சண்டை மாணவர்களிடையே தீவிரமடைந்து அது போராட்டமாக மாறியது., அந்த போராட்டமானது மெல்ல மெல்ல தீவிரமடைந்து அந்நாட்டின் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்த போராட்டங்களை ஒடுக்க வங்கதேசம் அரசு எடுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வராததால் மாணவர்களுடனான போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அது காட்டு தீ போல பரவியது.. இதனால் ஹசீனா வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம், அந்நாட்டின் இராணுவத் தளபதியான ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அங்கே தற்காலிகமாக ஆட்சியை அமைப்பதாக அறிவித்தார்.
வங்கதேசத்தில் இருந்து ஹசீனா டெல்லிக்கு சென்ற நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைப்பதாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு நாடளுமன்ற எம்பிகள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால் அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் போராட்டம் கையை மீறிச் சென்றதால் பிரதமர் பதவியை தான் ராஜினாமா செய்ததாக ஹசீனா கூறியிருந்தார்.
அவரது விமானம் டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கியது. அவர் தற்போது விமானப்படைத் தளத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார். அவர் அங்கேயே இருப்பாரா அல்லது லண்டனிற்கு செல்வாரா என்ற தகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனால் நேற்று இரவு வங்கதேசம் அதிபர் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இடைக்கால ஆட்சியை அமைந்துள்ளதை தொடர்ந்து ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.. அதாவது “ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவுள்ள இந்நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக அந்நாட்டின் அதிபர் ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேச முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கலிதா ஜியா விற்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரை மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலநலம் கருதி அவரை உடனே விடுவிக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.