சாலை ஓரம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல்..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!
வாணியம்பாடி அருகே காப்பு காட்டு பகுதியில் பெண் கழுத்தை நெரித்து ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக மீட்புநகைக்காக கொலை செய்யப்பட்டாரா..?அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என ஆலங்காயம் போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மங்கம்மாள்(51). இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை நூறு நாள் திட்டம் வேலைக்கு சென்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். பின்னர் விறகு வெட்டி கொண்டு வர அருகில் உள்ள காப்பு காட்டு பகுதிக்கு சென்றவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து காப்பு காட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் இன்று பிற்பகல் காட்டு பகுதி வழியாக சென்ற ஒருவர் பெண் சடலம் இருப்பதாக ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்த பெண் மங்கம்மாள் என்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார் .மேலும் ஓய்வு பெற்ற தடவியல் நிபுணர் பாரி தலைமையிலான தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மங்கம்மாள் அணிந்திருந்த உள்ளாடை விலகி இருந்த நிலையிலும் காதில் இருந்த கம்மல் , தாலி மற்றும் அவரது செல்போன் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே காப்பு காட்டிற்கு விறகு கொண்டு வர சென்ற பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
Discussion about this post