சூட்கேஸில் சடலமாக கிடந்த பெண்ணின் உடல்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சூட்கேஸில் கிடந்த பெண்ணின் உடல் யார் என்பது குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பேருந்து நிலையம் இருக்கிறது. இதன் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 தேதி மதியம் இந்த மண்டபத்தின் அருகே இணைப்பு சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தின் கீழ் முட்புதரில் ஒரு பெயரி சூட்கேஸ் கிடந்துள்ளதாகவும், அதில் இருந்து மிகவும் துர்நாற்றம் வீசி உள்ளதாக அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி வைகுந்தம் விஏஓ ஜெயக்குமாரிடம் தெரிவித்தனர்.
உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து விட்டு சங்ககிரி காவல்துரையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயினி மற்றும் காவல்துரையினர் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது துர்நாற்றம் வீசிய சூட்கேசை அவர்கள் திறந்து பார்த்தனர். அதில் பெட்சீட் துணியால் சுற்றப்பட்டு, ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கை, கால்களை மடித்து சுருக்கி அடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துரையினர் உடலை பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பெண் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகித்து விசாரணையில் காவல்துரையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து போலீசார் கூறும் போது, “சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆகிறது. தலையில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே முழுமையான விபரம் தெரியவரும்” என்று காவல்துரை தரப்பில் தெரிவித்தனர்.
இந்த பெண் கொலை சம்பவம் தொடர்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..