நீ பாஜக வா இரு எந்த பயலாக இரு அதை பற்றி கவலை இல்லை அதிமுகனா என்னனு தெரியாம பாஜக அரசியல் செய்யகூடாது-
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பாஜக நிர்வாகியிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பாஜக , அண்ணாமலை குறித்து சில கருத்துக்களை பேசியிருந்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தைச் சேர்ந்த பாஜக மண்டல் ஒன்றிய செயலாளர் காளிராஜ் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் செல் போனில் தொடர்பு கொண்டு கூட்டத்தில் அண்ணாமலை குறித்து கருத்து கூறியதற்கு கேள்வி எழுப்பி உள்ளார் அது குறித்து ஆடியோவில் : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் அதிமுக என்றால் என்னன் தெரியுமா அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி கிட்ட இருக்கு நீங்க (பாஜக) ஓபிஎஸ் பாத்துட்டு , ஓபிஎஸ் இபிஎஸ் என்று பேசிகிட்டு இருக்கீங்க.
நீ பாஜகவாக இரு, எந்த பயலாக இரு .. அதை பற்றி கவலை இல்லை அதிமுகவில் 2,600 பொது குழுவில், 2,500 பொதுக்குழு உறுப்பினர் எங்களிடம் உள்ளனர். மாவட்டச் செயலாளர் 76 பேரில், 71 பேர் உள்ளனர். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 75 பேரில் 71 பேர் எங்களிடம் உள்ளனர்.
அப்படின்னா எது அதிமுக இது தெரியாம பிஜேபி அரசியல் செய்யக்கூடாது என்று பேசியுள்ளார். பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.