உற்சாக வரவேற்பு அளித்த அமெரிக்க மக்கள்..!! நெகிழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்..!!
அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்..
தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா பயணம் சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சான்பிரான்சிஸ்கோ என்ற இடத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றறி உள்ளார்.
வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி புலம் பெயர் தமிழர்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவுள்ளதாவும்., செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது..
செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 14-ம் தேதி சென்னை திரும்புவார் என அறிக்கை வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் அமெரிக்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததை தொடர்ந்து அவர் பேசியதாவது., எங்கள் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி முதலமைச்சர் என்பதை தான் ஒரு தமிழன் வெளிநாட்டிற்கு. தன்னுடைய நாட்டின் வளர்ச்சிக்காக வந்திருக்கும் ஒரு மனிதனுக்கு நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி எனக்கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..