வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா..!! தொடங்கிய கொடியேற்றம்..!! அறிவிக்கப்பட்ட விடுமுறை..!!
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாத பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் வேளாங்கண்ணியே இன்று விழா கோலமாக காட்சி அளிக்கிறது. ஆண்டு தோறும் இந்த மாதம் பேராலயத்தில் பெருவிழா நடத்தப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியான இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் இன்னும் 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து, கொடியேற்றி, பெருவிழாவைத் தொடங்கி வைக்கவுள்ளார்.. இந்த கொடியேற்றத்தைக்காண சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இன்று பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மேலும், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
வேளாங்கன்னி மாதாவை வணங்கி விட்டு பின் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்., அதன் பின் கடலில் குளித்து விட்டு, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.. இன்று பக்தர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.. அச்சம் லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில், தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேளாங்கண்ணி பேரூராட்சி மற்றும் பேராலய நிர்வாகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.. , திருவிழாவை முன்னடிட்டு வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..