மகள் இறந்த 4-நாட்களில் தாய் செய்த செயல்.. சோகத்தில் அப்பகுதி மக்கள்..!
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் வசிக்கும் கட்டிட தொழிலாளி குணசேகரன் என்பவரின் மனைவி சுதா. குடும்ப வறுமை காரணமாக வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு 17 வயதில் ராகவி என்ற மகள் இருந்தார். ராகவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரம் ராகவியின் பெற்றோர்க்கு தெரிந்ததால் மாணவியை கண்டித்து இந்த வயதில் ஒழுங்காக படிக்கும் படி கூறியுள்ளனர். இதனால் விரத்தி அடைந்த ராகவி கடந்த 15ஆம் தேதி தனது காதலனுடன் செல்போனில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் ராகவி ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராகவி இறந்த நாளில் இருந்து அவரது தாய் சுதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் துக்கம் தாங்காமல் நேற்று காலை அவரும் தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் 4 நாளில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்