டியூசன் செல்வதாக கூறி சிறுவன் செய்த செயல்.. தலைசுற்றிய போலீசார்..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதியினர் மதுசூதன்ரெட்டி- கவிதா. இவர்களது 2ஆவது மகன் மகேந்தர் ரெட்டி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 4ஆம் தேதி டியூஷன் செல்வதாக கூறிய சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தேடி அலைந்தனர். டியூஷனில் போய் விசாரித்த போது சிறுவன் டியூஷனுக்கு வராதது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே காவல் நிலையத்திற்கு விரைந்தனர். இதையடுத்து போலீசார் சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் பைக்கில் செல்வது போல் தெரிந்தது. இதையடுத்து மேலும் அவ்வழியாக இருக்கும் சிசிடிவிகளை ஆய்வு செய்த போது அந்த சிறுவன் மலக்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து திருப்பதி ரயிலில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பதி போலீசாருருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, மகேந்தர் ரெட்டி திருப்பதி பேருந்து நிலையத்தில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து திருப்பதி போலீசார் சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதற்கு முன்பு பேருந்தில் வந்த ஒருவர் மூலம் மகேந்தர் ரெட்டி அவருடைய தாய் கவிதாவிற்கு போன் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாகவும் அவரை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து திருப்பதி போலீசார் அவரது பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் போன் செய்து சிறுவனை பேச வைத்தனர். பின்னர் திருப்பதியில் உள்ள சிறுவனின் உறவினர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து வைத்த 1000 ரூபாயுடன் சிறுவன் தனியாக திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்