அவனின்றி நான் ஏது- பகுதி 7
அடுத்த நாள் வழக்கத்திற்கு மாறாக இருவரும் கல்லூரிக்கு செல்லும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிலிருந்து புறப்பட்டனர். பின்னர் இருவரும் சந்தித்து பேருந்தில் கல்லூரிக்கு சென்றனர்.
ஒரே இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது கார்த்தி தனது காதலை குறித்து வீட்டில் சொல்ல இருப்பதாக கூறினான்.
நந்தினியையும் வீட்டில் கூறுமாறு கூறினான். அதற்கு நந்தினி, “இன்னும் மூன்று மாதங்கள் தானே கல்லூரி முடிய உள்ளது. அப்போ சொல்லாம்” என சொல்கிறாள்.
அதற்கு “நான் என் வீட்டில் இப்பவே சொல்றேன்” என கார்த்தி பேசிக் கொண்டு இருக்கும்போதே, இறங்க வேண்டிய இடம் வந்ததும் நந்தினி வேகமாக இறங்கிவிடுகிறாள்.
இதனால் கோபம் அடைந்த கார்த்தி முதன்முதலாக நந்தினியிடம் சண்டை போடுகிறான். இதனால், தனது தவறை உணர்ந்த நந்தினி, கார்த்தியின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுத்து, அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள்.
அதற்கு, “நான் போன்ல மன்னிப்பு கேட்டால் மன்னிக்க மட்டேன். நேர்ல வந்து சொல்லுனு” கூறுகிறான். “எங்க வரனும்” என்று நந்தினி கேட்கிறாள்.
அதற்கு, “எங்க அம்மா, பாட்டி எல்லாரும் உன்ன பார்க்கனும்-னு ஆசை படுராங்க. அதனால என்னோட மாமா வீட்டுக்கு வாடி-னு” கூப்பிடுகிறான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி, “என்னடா சொல்ர உங்க வீட்ல சம்மதிசிட்டாங்களானு” ஆச்சரியத்துடன் கேட்கிறாள்.
“ம்ம் அவங்க உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க நீ எப்பவும் நம்ப Meet பன்ற இடத்திற்கு வந்துடு நான் பைக்ல வந்து எங்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போறானு” சொல்கிறான். இதனால் ஆச்சரியத்தில் இருந்த நந்தினி, கார்த்தியின் வருகைக்காக காத்திருந்தாள்…,
கார்த்தியின் பெற்றோர் நந்தினியை பார்த்ததும் என்ன சொல்கிறார்கள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”